×

ஒருநாள், 20 ஓவர் போட்டிகளில் ஸ்டாப் க்ளாக் என்ற புதிய நடைமுறை ஜூன் மாதம் முதல் அமல் : ஐசிசி அறிவிப்பு!!

துபாய் : ஒரு நாள் மற்றும் டி20 ஓவர் போட்டிகளில் ஸ்டாப் க்ளாக் என்ற புதிய நடைமுறை ஜூன் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு ஓவர் முடிந்த அடுத்த 60 வினாடிகளில் பந்து வீசும் அணி அடுத்த ஓவரை தொடங்கி இருக்க வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் 2 முறை அம்பையர் எச்சரிப்பார். 3வது முறையாக விதியை மீறும் பட்சத்தில் பந்து வீசும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறைக்கு ஸ்டாப் க்ளாக் என்று பெயர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த நடைமுறை சர்வதேச போட்டிகளில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு வரவேற்பு கிடைத்து இருப்பதை அடுத்து துபாயில் நடைபெற்ற கூட்டத்தில் ஐசிசி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 20 நிமிடங்கள் வரை நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இன்னிங்சின் கடைசி ஓவரை வீசுவதற்கு தாமதம் செய்யும் பட்சத்தில் ஒரு பீல்டரை 30 யார்டு வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதிக்கும் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து வீரர்களுக்கு 5%மும் கேப்டனுக்கு இரு மடங்கும் அபராதமாக வசூலிக்கப்படும்.

The post ஒருநாள், 20 ஓவர் போட்டிகளில் ஸ்டாப் க்ளாக் என்ற புதிய நடைமுறை ஜூன் மாதம் முதல் அமல் : ஐசிசி அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : ICC ,DUBAI ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...